Friday, May 28, 2010

சித்தமெல்லாம் எனக்கு. . .






பித்தாபிறை சூடீபெரு 
    மானேயரு ளாளா 
எத்தான்மற வாதேநினைக் 
    கின்றேன்மனத் துன்னை 
வைத்தாய்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் 
    நல்லூரருட் டுறையுள் 
அத்தாஉனக் காளாய்இனி 
    அல்லேனென லாமே..



சித்தமெல்லாம் எனக்கு சிவமயமே இறைவா – உன்னை
சேவித்த கரங்களுக்கு இல்லை பயமே!
அத்தனில்லாமல் ஒரு அம்மை இல்லை – அந்த
அம்மையில்லாமல் இந்தப் பிள்ளை இல்லை!…
(சித்த)
பக்திப் பெருக்கில் எந்தன் ஊன் உருக – அந்த
பரவசத்தின் உள்ளே உயிர் உருக.
சக்தியெல்லாம் திரண்டு சிவம் பெருக – எந்தன்
சந்ததியே உந்தனுக்கு அடிபணிய, இறைவா!…
(சித்த)
கண்ணைத் திறந்து வைத்த கருப்பொருளே – கோவில்
கதவைத் திறந்தழைத்த திருவருளே
வெண்ணைநல்லூர் உறையும் அருட்கடலே – வந்து
என்னை ஆளுகின்ற பரம்பொருளே, இறைவா!…”
(சித்த)
படம் – திருவருட்செல்வர் – வருடம் 1967
நன்றி: rammalar.wordpress.com

3 comments:

  1. ஓம் நமசிவாய..
    என்ன ஒரு தாக்கம்..TMS அய்யாவின் உணர்ச்சி மிக்க குரல்...கவிஞரின் வரிகளுக்கு உயிர் கொடுக்கும் இசையும், குரலும்..
    சில நொடிகள் சிவ ஸந்நிதானத்துக்கே கொண்டு செல்லும்..
    ஓம் நமசிவாய..

    ReplyDelete

தங்களின் மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.. :)

விருப்பம் :)