Friday, May 28, 2010

வாசி வாசியென்று..


“வாசி வாசியென்று வாசித்த தமிழின்று
சிவா சிவாயென சிந்தைதனில் நின்று
அவாவினால் இந்த ஒளவைத் தமிழ் கொண்டு
கவிபாடினான் உன்னைக் கண்குளிரக் கண்டு.
ஒன்றானவன், உருவில் இரண்டானவன்,
உருவான செந்தமிழில் மூன்றானவன்,
நன்றான வேதத்தில் நான்கானவன்,
நமச்சிவாய என் ஐந்தானவன்,
இன்பச் சுவைகளுக்குள் ஆறானவன்
இன்னிசை ஸ்வரங்களில் ஏழானவன்
சித்திக்கும் பொருள்களில் எட்டானவன்
தித்திக்கும் நவரச வித்தானவன்
பத்தானவன், நெஞ்சில் பற்றானவன்
பன்னிருகை வேலவனைப் பெற்றானவன்
முற்றாதவன் மூல முதலானவன்
முன்னைக்கும் பின்னைக்கும் நடுவானவன்
ஆணாகிப் பெண்ணாகி நின்றானவன்
அவையொன்று தானென்று சொன்னானவன்
தான்பாதி உமைபாதி கொண்டானவன்
சரிபாதி பெண்மைக்குத் தந்தானவன்
காற்றானவன்…ஒளியானவன்…
நீரானவன்… நெருப்பானவன்…
நேற்றாகி இன்றாகி எனறைக்கும் நிலையான
ஊற்றாகி நின்றானவன்… அன்பின்
ஒளியாகி நின்றானவன்!”
படம் – திருவிளையாடல் – வருடம் 1965
நன்றி: rammalar.wordpress.com

No comments:

Post a Comment

தங்களின் மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.. :)

விருப்பம் :)