Saturday, April 27, 2013

சிவபெருமான் போற்றிகள் 1276 - பகுதி 2 - (301-600)



முதற்கண் நன்றி: https://www.facebook.com/thirumarai

ஓம் ஏனத் திளமருப்புப் பூண்டாய் போற்றி
ஓம் ஏனோர்க்கு எளிய இறைவா போற்றி
ஓம் ஐயா போற்றி அணுவே போற்றி
ஓம் ஐயாய் பெரியாய் சிறியாய் போற்றி
ஓம் ஐயாறு நின்ற ஐயா போற்றி
ஓம் ஒட்டகத்து ஊணா உகந்தாய் போற்றி
ஓம் ஒத்த உணர்வினை உவந்தாய் போற்றி
ஓம் ஒப்பள வில்லா உருவோய் போற்றி
ஓம் ஒப்பினை யில்லா உருவே போற்றி
ஓம் ஒருகாலத் தொன்றாகி நின்றாய் போற்றி 310

ஓம் ஒருசுடராய் உலகேழும் ஆனோய் போற்றி
ஓம் ஒருதலை மகனாய் உயர்ந்தோய் போற்றி
ஓம் ஒருமை பெண்மை உடையாய் போற்றி
ஓம் ஒழிவற நிறைந்த ஒருவ போற்றி
ஓம் ஒள்ளெரி வீசும் பிரானே போற்றி
ஓம் ஒளிகொள் தேவ தேவனே போற்றி
ஓம் ஒளியாய் நிறைவாய் போற்றி போற்றி
ஓம் ஒற்றி யூருடை ஒருவ போற்றி
ஓம் ஒற்றியூர் உடைய கொற்றவா போற்றி
ஓம் ஒற்றை வெள்ளேறு உடையாய் போற்றி 320

ஓம் ஒன்றாய் அனைத்துமாய் நின்றாய் போற்றி
ஓம் ஓங்காரத் துருவாகி நின்றாய் போற்றி
ஓம் ஓங்காரத்து உட்பொருளாய் நின்றாய் போற்றி
ஓம் ஓங்கி அழலாய் நிமிர்ந்தாய் போற்றி
ஓம் ஓங்குசிற்றேமத்து ஒருவா போற்றி
ஓம் ஓணகாந்தன் தளியாய் போற்றி
ஓம் ஓணகாந்தீசுவரா போற்றி போற்றி
ஓம் ஓத்தூர் மேவிய ஒளியே போற்றி
ஓம் ஓதாதே வேதம் உணர்ந்தாய் போற்றி
ஓம் ஓமாம் புலியூர் ஒருவனே போற்றி 330

ஓம் ஓராதார் உள்ளத்தில் நில்லாய் போற்றி
ஓம் ஓருருவாய்த் தோன்றி உயர்ந்தாய் போற்றி
ஓம் ஓவாத சத்தத்து ஒலியே போற்றி
ஓம் கங்கைச் சடையீர் போற்றி போற்றி
ஓம் கச்சிஅநேகதங்காவதா போற்றி
ஓம் கச்சிநெறிக் காரைக் காடா போற்றி
ஓம் கச்சிமேற்றளியுறை கடலே போற்றி
ஓம் கச்சூ ராலக் கோயிலாய் போற்றி
ஓம் கஞ்சனூர் ஆண்டகற் பகமே போற்றி
ஓம் கட்டியே போற்றி கதியே போற்றி 340

ஓம் கடம்பந் துறைவளர் கடலே போற்றி
ஓம் கடம்பூர் மேவிய விடங்கா போற்றி
ஓம் கடம்பூர் மேவிய விடங்கா போற்றி
ஓம் கடல்நஞ்சம் உண்டிருண்ட கண்ட போற்றி
ஓம் கடலாய்ப் பரக்கும் முதலே போற்றி
ஓம் கடலும் வரையும் ஆனாய் போற்றி
ஓம் கடவூர் மயானக் கடவுளே போற்றி
ஓம் கடவூர்க்கால வீரட்டா போற்றி
ஓம் கடிக்குளத் துறைகடல் அமுதே போற்றி
ஓம் கடித்தாமரை ஏய்ந்த கண்ணாய் போற்றி 350

ஓம் கடுவாய்க் கரைப்புத் தூரா போற்றி
ஓம் கடுவிருட்சுடரை ஒப்பாய் போற்றி
ஓம் கடைமுடிப் பரமநின் கழல்கள் போற்றி
ஓம் கடையேன் அடிமை கண்டாய் போற்றி
ஓம் கண்டவர் சிந்தை கவர்ந்தாய் போற்றி
ஓம் கண்டவர் நெஞ்சம் கவர்வாய் போற்றி
ஓம் கண்டிவீ ரட்டக் கரும்பே போற்றி
ஓம் கண்ணப்பர்க் சிவந்தானாய் நின்றாய் போற்றி
ஓம் கண்ணார் அமுதக் கடலே போற்றி
ஓம் கண்ணார் அமுதே போற்றி போற்றி 360

ஓம் கண்ணார் கோயில்வாழ் கனியே போற்றி
ஓம் கண்ணிடை மணியை ஒப்பாய் போற்றி
ஓம் கண்ணிற் கருமணி ஆவோய் போற்றி
ஓம் கண்ணின்மேற் கண்ணொன்று உடையாய் போற்றி
ஓம் கண்ணினுள் மணியே கொழுந்தே போற்றி
ஓம் கண்ணு மூன்றுடையீர் போற்றி போற்றி
ஓம் கதியே போற்றி கனியே போற்றி
ஓம் கமலாலயனுக்கு அருள்வோய் போற்றி
ஓம் கயல்விழி பாகம் கொண்டாய் போற்றி
ஓம் கயாசூரனை அவனாற் கொன்றாய் போற்றி 370

ஓம் கயிலாயம் இடமாக் கொண்டாய் போற்றி
ஓம் கயிலை மலையாய் போற்றி போற்றி
ஓம் கயிலை மலையானே போற்றி போற்றி
ஓம் கயிலை மலையானே போற்றி போற்றி
ஓம் கரங்கூப்ப நேரும் காட்சியாய் போற்றி
ஓம் கரநான்கும் முக்கண்ணும் உடையாய் போற்றி
ஓம் கரவீ ரச்சங் கரனே போற்றி
ஓம் கருக்குடி அண்ணல்நின் கழல்கள் போற்றி
ஓம் கருகாவூருறை கடம்பா போற்றி
ஓம் கருணைக் கடலே ஐயா போற்றி 380

ஓம் கருத்துடைய பூதப்படையாய் போற்றி
ஓம் கருதி வந்தோர்க்கு உறுதியே போற்றி
ஓம் கருதுவார்க்கு ஆற்ற எளியாய் போற்றி
ஓம் கருப்பறியல்நகர் காப்பாய் போற்றி
ஓம் கருமுகி லாகிய கண்ணே போற்றி
ஓம் கருவிலி அமருங் கண்ணே போற்றி
ஓம் கருவூர் ஆனிலைக் கண்மணி போற்றி
ஓம் கல்லலகு பாணி பயின்றாய் போற்றி
ஓம் கலிக்காமூர் வளர் கண்ணே போற்றி
ஓம் கலைக்கெலாம் பொருளே போற்றி போற்றி 390

ஓம் கலைகள் அனைத்தும் கடந்தாய் போற்றி
ஓம் கலைபயில் அழகா போற்றி போற்றி
ஓம் கலைய நல்லூர்க் கடவுளே போற்றி
ஓம் கலையார் அரிகே சரியாய் போற்றி
ஓம் கவலைப் பிறப்பும் காப்பாய் போற்றி
ஓம் கழலடைந்தார் செல்லுங் கதியே போற்றி
ஓம் கழிப்பாலை உறை கரும்பே போற்றி
ஓம் கழுநீர் மாலைக் கடவுள் போற்றி
ஓம் கள்ள மனத்தைக் கடந்தாய் போற்றி
ஓம் கள்ளங் கடிந்தென்னை ஆண்டாய் போற்றி 400

ஓம் கள்ளி முதுகாட்டில் ஆடி போற்றி
ஓம் கள்ளில் மேய கனியே போற்றி
ஓம் கற்குடி மாமலைக் கண்ணுதல் போற்றி
ஓம் கற்றவர் உண்ணுங் கனியே போற்றி
ஓம் கற்றவர் உள்ளம் உற்றாய் போற்றி
ஓம் கற்றவர் விரும்புங் கனியே போற்றி
ஓம் கற்றோர்களுக்கோர் அமுதே போற்றி
ஓம் கறைமணி மிடற்றோய் கடலே போற்றி
ஓம் கறையுடைய கண்டம் உடையாய் போற்றி
ஓம் கனலாய் எரியும் சிவனே போற்றி 410

ஓம் கனலைக் கண்ணில் உடையோய் போற்றி
ஓம் கனவிலுந் தேவர்க்கு அரியாய் போற்றி
ஓம் கன்றாப்பூர் நடுதறியே போற்றி
ஓம் கன்றிய காலனைக் காய்ந்தோய் போற்றி
ஓம் கன்னல் போற்றி கரும்பு போற்றி
ஓம் கன்னார் உரித்த கனியே போற்றி
ஓம் காட்டகத்தே ஆடல் உடையாய் போற்றி
ஓம் காட்டகத்தே ஆடல் மகிழ்ந்தாய் போற்றி
ஓம் காடிடங் கொண்ட கடவுளே போற்றி
ஓம் காடுடைப் பொடியைப் பூசினோய் போற்றி 420

ஓம் காண்டற்கு அரியவொரு கடவுள் போற்றி
ஓம் காதலிப்பார் தங்கட்கு எளியாய் போற்றி
ஓம் காதிற் குழையும் பெய்தாய் போற்றி
ஓம் காமரங்கள் பாடித் திரிவாய் போற்றி
ஓம் காமனையும் கரியாகக் காய்ந்தாய் போற்றி
ஓம் கார்க்குன்ற மழையே போற்றி போற்றி
ஓம் காரணங் காட்டும் கனியே போற்றி
ஓம் கார்மேகம் அன்ன மிடற்றாய் போற்றி
ஓம் காரியம் நடத்தும் கடவுளே போற்றி
ஓம் கால கண்டனே போற்றி போற்றி 430

ஓம் கால காலனாய் நின்றாய் போற்றி
ஓம் காலனைக் காய்ந்து நட்டாய் போற்றி
ஓம் காலை முளைத்த கதிரே போற்றி
ஓம் காவ தேசுவரா போற்றி போற்றி
ஓம் காவின் தென்றலே ஆவாய் போற்றி
ஓம் காழியுள் மேய கடலே போற்றி
ஓம் காளத்தி நாதநின் கழலிணை போற்றி
ஓம் காளத்தி நாதா போற்றி போற்றி
ஓம் காற்றாகி எங்கும் கலந்தாய் போற்றி
ஓம் காற்றாய்த் திரியும் அரனே போற்றி 440

ஓம் காற்றினும் கடிதாக நடந்தாய் போற்றி
ஓம் காற்றும் வெளியும் ஆனாய் போற்றி
ஓம் கானக் கல்லாற் கீழ் நிழலாய் போற்றி
ஓம் கானப்பேருறை காளாய் போற்றி
ஓம் கானாட்டு முள்ளூர்க் கடவுளே போற்றி
ஓம் கானூர் மேயசெங் கரும்பே போற்றி
ஓம் கிடைத்தற்கு அரிய பொருளே போற்றி
ஓம் கீழ்க்கோட்டத்தெங் கூத்தா போற்றி
ஓம் கீழ்த்திருக் காட்டுப் பள்ளியாய் போற்றி
ஓம் கீழ்வேளூரான் கேடிலீ போற்றி 450

ஓம் குடந்தைக் காரோ ணத்தாய் போற்றி
ஓம் குடமூக் கமர்கும் பேசா போற்றி
ஓம் குடமூக்கில் இடமாகிக் கொண்டாய் போற்றி
ஓம் குடவாயில் மன்னிய குருவே போற்றி
ஓம் குண்டரொடு பிரித்தென்னை ஆண்டாய் போற்றி
ஓம் குமரனையும் மகனாக உடையாய் போற்றி
ஓம் குரக்குக்காவிற் குருவே போற்றி
ஓம் குரங்கணில் முட்டங் குலவினாய் போற்றி
ஓம் குரவங் கமழும் குற்றால போற்றி
ஓம் குருகாவூருறை குணமே போற்றி 460

ஓம் குருவி தனக்கும் அருளினை போற்றி
ஓம் குரைகழலாற் கூற்றுதைத்த கோவே போற்றி
ஓம் குலச்சிறை ஏத்துங்குன்றே போற்றி
ஓம் குவைப்பதி மலிந்த கோவே போற்றி
ஓம் குழகா போற்றி குணக்கடலே போற்றி
ஓம் குழவிப் பிறைசடைமேல் வைத்தாய் போற்றி
ஓம் குழிதண்டலையாய் போற்றி போற்றி
ஓம் குழைத்தசொன் மாலை கொள்வோய் போற்றி
ஓம் குளத்தூர் அமர்ந்த கோவே போற்றி
ஓம் குளிர்டவீழி மிழலையமர் குழகா போற்றி 470

ஓம் குற்ற மறுத்தார் குணமே போற்றி
ஓம் குற்றம் பொறுத்த ஈசுவரா போற்றி
ஓம் குற்றாலத் தெங்கூத்தா போற்றி
ஓம் குற்றாலத் தெங்கூத்தா போற்றி
ஓம் குறிக்கோள் ஆகும் குழகா போற்றி
ஓம் குறியாம் இசையில் குளிர்ந்தாய் போற்றி
ஓம் குறியே போற்றி குணமே போற்றி
ஓம் குறுக்கை வீரட்டக் குழகா போற்றி
ஓம் குனிராரூர் கோயிலாக் கொண்டாய் போற்றி
ஓம் கூடல் இலங்கு குருமணி போற்றி 480

ஓம் கூடலம் பதியுறை கோவே போற்றி
ஓம் கூடலையாற்றூர்க் கோவே போற்றி
ஓம் கூடற் கோயில் கொண்டாய் போற்றி
ஓம் கூத்தாட வல்ல குழக போற்றி
ஓம் கூம்பித் தொழுவார் குறிப்பே போற்றி
ஓம் கூற்றினையும் குரைகழலால் உதைத்தாய் போற்றி
ஓம் கூற்றுவன் பிணியாக் கொற்றவா போற்றி
ஓம் கூறேறா மங்கை மழுவா போற்றி
ஓம் கேடின்று உயர்ந்த சுடரே போற்றி
ஓம் கேதாரக்கிரிக் கிழவோய் போற்றி 490

ஓம் கைச்சின மேவிய கண்ணுதல் போற்றி
ஓம் கையறு தும்பம் களைவோய் போற்றி
ஓம் கையார் மழுவெம் படையாய் போற்றி
ஓம் கைவேழ முகத்தவனைப் படைத்தாய் போற்றி
ஓம் கொங்கலரும் நறுங்கொன்றைத் தாராய் போற்றி
ஓம் கொட்டையூரிற்கோ டீச்சரா போற்றி
ஓம் கொடிமாடச் செங்குன்றாய் போற்றி
ஓம் கொடியவன் கூற்றம் உதைத்தாய் போற்றி
ஓம் கொடுங்குன்றமருங் கோவே போற்றி
ஓம் கொடுவினை தீர்க்கும் கோவே போற்றி 500

ஓம் கொண்டீச் சரத்துக் கோவே போற்றி
ஓம் கொம்பனைய நுண்ணிடையாள் கூறா போற்றி
ஓம் கொய்மலரங் கொன்றைச் சடையாய் போற்றி
ஓம் கொல்புலித் தோலாடைக் குழக போற்றி
ஓம் கொல்லார் மழுவாட் படையாய் போற்றி
ஓம் கொல்லுங் கூற்றினை <உதைத்தாய் போற்றி
ஓம் கொள்ளம் பூதூர்க் கோவே போற்றி
ஓம் கொள்ளிக் காடமர் கொற்றவ போற்றி
ஓம் கொள்ளுங் கிழமை ஏழானாய் போற்றி
ஓம் கோகழி மேவிய கோவே போற்றி 510

ஓம் கோட்டாற மருங்குழகா போற்றி
ஓம் கோட்டூர் மேவிய கொழுந்தே போற்றி
ஓம் கோடிக் கோயிற் குழகா போற்றி
ஓம் கோடிக்காவுடைக் கோவே போற்றி
ஓம் கோடியாய் போற்றி குழக போற்றி
ஓம் கோணமாமலைமடி கொண்டாய் போற்றி
ஓம் கோதிலார் மனத்தே மேவுவாய் போற்றி
ஓம் கோயிலா என்சிந்தை கொண்டாய் போற்றி
ஓம் கோயிற் குடிகொளும் கொற்றவா போற்றி
ஓம் கோல நீறணி கோமான் போற்றி 520

ஓம் கோலக் கோகர்ணக் கொழுந்தே போற்றி
ஓம் கோலக்காவிற் கோவே போற்றி
ஓம் கோலங்கள் மேன்மேல் உகப்பாய் போற்றி
ஓம் கோலம் பலவும் உகப்பாய் போற்றி
ஓம் கோலானை அழலால் காய்ந்தாய் போற்றி
ஓம் கோவல்வீரட்டக் கோமான் போற்றி
ஓம் கோழம் பத்துறை கோவே போற்றி
ஓம் கோளிலி உறையுங் கோவே போற்றி
ஓம் கோளிலி நாதா போற்றி போற்றி
ஓம் சக்கரப்பள்ளி எம் சங்கரா போற்றி 530

ஓம் சங்கரனே தத்துவனே போற்றி போற்றி
ஓம் சங்கொத்த நீற்றெஞ் சதுரா போற்றி
ஓம் சடையாய் போற்றி சங்கரா போற்றி
ஓம் சடையிடைக் கங்கை தரித்தாய் போற்றி
ஓம் சத்தாகிய சிற்குணனே போற்றி
ஓம் சத்திமுத்தச் சதுரா போற்றி
ஓம் சத்தியும் சிவமும் ஆனோய் போற்றி
ஓம் சதாசிவனே நன்மையனே போற்றி போற்றி
ஓம் சதுரனே போற்றி சாமியே போற்றி
ஓம் சதுரா சதுரக் குழையாய் போற்றி 540

ஓம் சந்தனச் சாந்தின் சுந்தர போற்றி
ஓம் சராசரமாகி நின்றாய் போற்றி
ஓம் சாத்த மங்கைச் சம்புவே போற்றி
ஓம் சாம்பர் அகலத்து அணிந்தாய் போற்றி
ஓம் சாம்பர் மெய்பசுந் தலைவா போற்றி
ஓம் சாய்க்காடினிதுறை சதுரா போற்றி
ஓம் சாவாமே காத்தென்னை யாண்டாய் போற்றி
ஓம் சிக்கல் நகர்வளர் செல்வா போற்றி
ஓம் சிக்கெனப் பிடிப்போர் சிந்தையோய் போற்றி
ஓம் சிட்டன் போற்றி சேகரன் போற்றி 550

ஓம் சித்தம் தெளிய வைத்தாய் போற்றி
ஓம் சித்தனே போற்றி அத்தனே போற்றி
ஓம் சிந்தனைக் கரிய சிவமே போற்றி
ஓம் சிந்திப்பார் நெல்லிக் கனியே போற்றி
ஓம் சிந்தியா தவர்க்கும் சொந்தமே போற்றி
ஓம் சிராப்பள்ளி மேவிய சிவனே போற்றி
ஓம் சிராப்பள்ளி மேவிய சிவனே போற்றி
ஓம் சிராமலை மேவிய சிவனே போற்றி
ஓம் சிரித்துப் பகை வெல்லும் சிவனே போற்றி
ஓம் சிலந்திக் கருள்முனம் செய்தான் போற்றி 560

ஓம் சிலந்திக்கருள் முன்னம் செய்தாய் போற்றி
ஓம் சில்லைச் சிரைத்தலை ஊணா போற்றி
ஓம் சிறவே போற்றி சிவமே போற்றி
ஓம் சிறியார் பெரியார் துணையே போற்றி
ஓம் சிறுகுடிப் பிறைமுடிச் செல்வா போற்றி
ஓம் சிறுமை நோக்கிச் சினந்தாய் போற்றி
ஓம் சீரார் திருவை யாறா போற்றி
ஓம் சீரார் திருவை யாறா போற்றி
ஓம் சீரால் வணங்கப் படுவாய் போற்றி
ஓம் சீரால் வணங்கப் படுவாய் போற்றி 570

ஓம் சுடர்த்திங்கட் கண்ணி உடையாய் போற்றி
ஓம் சுடர்வாய் அரவுடைச் சோதி போற்றி
ஓம் சுடரில் திகழ்கின்ற சோதி போற்றி
ஓம் சுடரொளிப் பிழம்பே போற்றி போற்றி
ஓம் சுந்தரத்த பொடிதனைத் துதைந்தாய் போற்றி
ஓம் சுருதிப் பொருளே அத்தா போற்றி
ஓம் சுவைத்தலை மேவிய கண்ணே போற்றி
ஓம் சுழியல் வளருந் துணைவா போற்றி
ஓம் சூட்டான திங்கள் முடியாய் போற்றி
ஓம் சூலப் படையுடையாய் போற்றி போற்றி 580

ஓம் சூழ்ச்சி சிறிதும் இல்லாய் போற்றி
ஓம் செங்காட்டங்குடிச் சேவகா போற்றி
ஓம் செந்தமிழுள்ளும் சிறந்தாய் போற்றி
ஓம் செந்தழற் கொழுந்தே செய்யனே போற்றி
ஓம் செம்பொன் பள்ளிச் செல்வா போற்றி
ஓம் செம்மொழி அருளும் சிவனே போற்றி
ஓம் செய்ய நெறியில் செலுத்துவாய் போற்றி
ஓம் செய்ய மேனியின் அழகா போற்றி
ஓம் செய்யனே போற்றி ஐயனே போற்றி
ஓம் செய்யாய் கரியாய் வெளியாய் போற்றி 590

ஓம் செயலை முற்றச் செய்குவாய் போற்றி
ஓம் செய்வினைகள் நல்வினைகள் ஆனோய் போற்றி
ஓம் செய்வேள்வித் தக்கனைமுன் சிதைத்தாய் போற்றி
ஓம் செல்லாச் செல்வம் உடையாய் போற்றி
ஓம் செல்லாச் செல்வம் உடையாய் போற்றி
ஓம் செழுமலர்ச் சிவபுரத் தரசே போற்றி
ஓம் செழுமலர்ச் சிவபுரத் தரசே போற்றி
ஓம் செற்றவர் சினத்தை எற்றுவாய் போற்றி
ஓம் சென்றடைந்தார் தீவினை தீர்ப்பாய் போற்றி
ஓம் சென்னியில் வைத்த சேவக போற்றி 600

திருச்சிற்றம்பலம்

சிவபெருமான் போற்றிகள் 1276 - பகுதி 1 - (1-300)

விருப்பம் :)