Saturday, April 27, 2013

சிவபெருமான் போற்றிகள் 1276 - பகுதி 3 - (601-900)



முதற்கண் நன்றி: https://www.facebook.com/thirumarai

ஓம் சேய்ஞலூர் உறையுஞ் செல்வா போற்றி
ஓம் சேவார் வெல்கொடிச் சிவனே போற்றி
ஓம் சேறைச் செந்நெறிச் செல்வா போற்றி
ஓம் சைவம் அருளிய தெய்வமே போற்றி
ஓம் சைவா போற்றி தலைவா போற்றி
ஓம் சொக்கனே போற்றி சிட்டனே போற்றி
ஓம் சொந்தமும் துணையும் ஆனோய் போற்றி
ஓம் சொந்தமென்று உரைப்பார் சுகமே போற்றி
ஓம் சொல்ல வொண்ணாச் சோதீ போற்றி
ஓம் சொல்லாகிச் சொற்பொருளாய் நின்றாய் போற்றி 610

ஓம் சொல்லில் தெறிக்கும் சுவையே போற்றி
ஓம் சொல்லுவார் சொற்களைச் சோதிப்பான் போற்றி
ஓம் சொல்லுவார் சொற்பொருள் ஆனாய் போற்றி
ஓம் சொற்கவி அனைத்தும் சூழ்ந்தாய் போற்றி
ஓம் சோதித்தார் காணாமை நின்றாய் போற்றி
ஓம் சோதியே அழிவி லானே போற்றி
ஓம் சோபுர மேவிய சொக்கா போற்றி
ஓம் சோமனையும் செஞ்சடைமேல் வைத்தாய் போற்றி
ஓம் சோற்றுத் துறைவளர் தொல்லோய் போற்றி
ஓம் ஞாலத்தார் தொழும் நன்மையே போற்றி 620

ஓம் ஞாலமே நடத்தும் நாயகா போற்றி
ஓம் ஞானப் பெருங்கடற்கோர் நாத போற்றி
ஓம் ஞானப் பெருங்கடற்கோர் நாத போற்றி
ஓம் தக்கணா போற்றி தருமா போற்றி
ஓம் தகவுடையார் நெஞ்சிருக்கை கொண்டாய் போற்றி
ஓம் தஞ்சம் கொடுத்துத் தாங்குவாய் போற்றி
ஓம் தடுத்தாட் கொண்ட நாதா போற்றி
ஓம் தண்டலை நீணெறித் தாயே போற்றி
ஓம் தத்துவ ஞானத் தமிழே போற்றி
ஓம் தத்துவ ஞானத் தெளிவே போற்றி 630

ஓம் தத்துவனே போற்றி தாதாய் போற்றி
ஓம் தந்தை போற்றி தருமமே போற்றி
ஓம் தரும புரம்வளர் தாயே போற்றி
ஓம் தலைக்குத் தலைமாலை யணிந்தாய் போற்றி
ஓம் தலைச்சங் காடமர் தத்துவ போற்றி
ஓம் தலையாலங்கா டமர்ந்தாய் போற்றி
ஓம் தவத்தில் காட்டும் முகத்தாய் போற்றி
ஓம் தவநெறிகள் சாதித்து நின்றாய் போற்றி
ஓம் தவம்புரி தவமே தலைவா போற்றி
ஓம் தன்னியல்பார் மற்றொருவர் இல்லாய் போற்றி 640

ஓம் தாங்கரிய சிவந்தானாய் நின்றாய் போற்றி
ஓம் தாமரையான் தலையைச் சாய்த்தாய் போற்றி
ஓம் தாயென இரங்கும் உளத்தோய் போற்றி
ஓம் தாவில் நாயகா போற்றி போற்றி
ஓம் தாளி யறுகின் தாராய் போற்றி
ஓம் தானவர் புரங்கள் எரித்தாய் போற்றி
ஓம் திங்கட் பாதிசேர் சடையோய் போற்றி
ஓம் திசைக்கெலாம் தேவாகி நின்றாய் போற்றி
ஓம் திசைமுகன்றன் சிரமொன்று சிதைத்தாய் போற்றி
ஓம் திசையனைத்தும் நிறைந்த செல்வ போற்றி 650

ஓம் திசையனைத்தும் பிறவும் ஆனோய் போற்றி
ஓம் திரிபுரம் எரித்த சிவனே போற்றி
ஓம் திருஆமாத்தூர்த் தேவே போற்றி
ஓம் திருஇரும்பூளைத் தேவே போற்றி
ஓம் திருக்கழுக்குன்றிற் செல்வா போற்றி
ஓம் திருக்களர் மேவிய தேவே போற்றி
ஓம் திருக்காறாயில் தியாகா போற்றி
ஓம் திருக்கோடி காவுடைத் திருவே போற்றி
ஓம் திருத்தினை நகரச் சிவனே போற்றி
ஓம் திருத்துருத்தி கொண்ட தென்னவா போற்றி 660

ஓம் திருத்தெங்கூர் வளர் தேனே போற்றி
ஓம் திருத்தெளிச்சேரிச் சிவனே போற்றி
ஓம் திருநணா வளரும் திருவே போற்றி
ஓம் திருந்துதேவன்குடித் தேவா போற்றி
ஓம் திருப்பரங்குன்றிற் செல்வா போற்றி
ஓம் திருப்பருப்பதத்துத் தேவே போற்றி
ஓம் திருப்பனை யூர்வளர் தேவே போற்றி
ஓம் திருப்பாலைத்துறைச் செல்வா போற்றி
ஓம் திருப்பாற் றுறையுறை தேவே போற்றி
ஓம் திருப்புத்தூர்த்திருத் தளியாய் போற்றி 670

ஓம் திருப்புள்ள மங்கைத் திருவே போற்றி
ஓம் திருப்புன் கூரமர் திருவே போற்றி
ஓம் திருப்புனவாயிலெம் செல்வா போற்றி
ஓம் திருப்பூந்துருத்தித் தேசிக போற்றி
ஓம் திருமங்கலக்குடித் தேனே போற்றி
ஓம் திருமாணி குழிவளர் தேவே போற்றி
ஓம் திருமாலுக் காழி அளித்தாய் போற்றி
ஓம் திருமூலட் டானனே போற்றி போற்றி
ஓம் திருமேற்றளி நாயகா போற்றி போற்றி
ஓம் திருவல்லம் மேவிய தீவணா போற்றி 680

ஓம் திருவாகி நின்ற திறமே போற்றி
ஓம் திருவாஞ் சியம்வளர் தேவே போற்றி
ஓம் திருவிடை வாய்வளர் தேவா போற்றி
ஓம் திருவிளநகர் உறை திருவே போற்றி
ஓம் திருவீரட்டானச் செல்வா போற்றி
ஓம் திருவூறல்வளர் தேவே போற்றி
ஓம் திருவைகாஉறை சிவனே போற்றி
ஓம் திலதைப் பதிவாழ் திலகமே போற்றி
ஓம் தில்லைச் சிற்றம்பலம் மேயாய் போற்றி
ஓம் தீயிடை மூன்றாய்த் திகழ்ந்தாய் போற்றி 690

ஓம் துஞ்சாப் பலிதேருந் தோன்றால் போற்றி
ஓம் துஞ்சிருளில் ஆடல் உகந்தாய் போற்றி
ஓம் துரியமும் இறந்த சுடரே போற்றி
ஓம் துரியா தீதமாய் நின்றாய் போற்றி
ஓம் துருத்தி ஈசநின் துணையடி போற்றி
ஓம் துறையூர் அமர்ந்த தூயோய் போற்றி
ஓம் துறையூர் நாதா போற்றி
ஓம் துன்பந்துடைக்கும் தூயனே போற்றி
ஓம் தூண்டு சுடரனைய சோதி போற்றி
ஓம் தூத்தூய திருமேனித் தோன்றல் போற்றி 700

ஓம் தூநீறு மெய்க்கணிந்த சோதீ போற்றி
ஓம் தூமாலை மத்தம் அணிந்தாய் போற்றி
ஓம் தூவெண் மதியைச் சூடினோய் போற்றி
ஓம் தெரியத் தேனாய் இனிப்பாய் போற்றி
ஓம் தெரிவரிதாகிய தெளிவே போற்றி
ஓம் தென்குடந்தை மேவும் தேவா போற்றி
ஓம் தென்குடித் திட்டைத் தேவே போற்றி
ஓம் தென்குரங்காடு துறையாய் போற்றி
ஓம் தென்திரு முல்லை வாயிலாய் போற்றி
ஓம் தென்தில்லை மன்றினுள் ஆடி போற்றி 710

ஓம் தென்றிலை மன்றினுள் ஆடி போற்றி
ஓம் தென்னன் உவந்த மன்னனே போற்றி
ஓம் தென்னாடு உடைய சிவனே போற்றி
ஓம் தேசப் பளிங்கின் திரளே போற்றி
ஓம் தேசம் பரவப் படுவாய் போற்றி
ஓம் தேம்புவார் ஏக்கம் தீர்ப்பாய் போற்றி
ஓம் தேவாரத் தலப் போற்றி
ஓம் தேவார்ந்த தேவர்க்குந் தேவே போற்றி
ஓம் தேவி நாயகன் போற்றி போற்றி
ஓம் தேவூர் ஆதிநல் தேனே போற்றி 720

ஓம் தேனன் போற்றி தேவர்பிரான் போற்றி
ஓம் தேனே இன்னமுதே கோனே போற்றி
ஓம் தொடங்கிய வாழ்க்கையில் தொடர்வோய் போற்றி
ஓம் தொண்டர் பரவும் இடத்தாய் போற்றி
ஓம் தொண்டவர் உள்ளம் ஆண்டவா போற்றி
ஓம் தொத்ததார் இதழித் தொடையாய் போற்றி
ஓம் தொல்லமரர் சூளா மணியே போற்றி
ஓம் தொழில் நோக்கியாளுஞ் சுடரே போற்றி
ஓம் தொழுதகை துன்பந் துடைப்பாய் போற்றி
ஓம் தொழுவார் மையல் துனிப்பாய் போற்றி 730

ஓம் தோடுடைச் செவியாய் போற்றி போற்றி
ஓம் தோணியும் ஏணியும் ஆனவன் போற்றி
ஓம் தோலிற் பொலிந்த உடையாய் போற்றி
ஓம் தோழா போற்றி துணைவா போற்றி
ஓம் தோளா முத்தச் சுடரே போற்றி
ஓம் தோன்றியென் னுள்ளத் திருந்தாய் போற்றி
ஓம் நகைப்பில் உலகம் துகைப்பாய் போற்றி
ஓம் நஞ்சுடைய கண்டனே போற்றி போற்றி
ஓம் நஞ்சுண்ட கண்டனே போற்றி போற்றி
ஓம் நஞ்சும் அருந்தும் நெஞ்சினோய் போற்றி 740

ஓம் நஞ்சே அமுதா நயந்தாய் போற்றி
ஓம் நஞ்சொடுங்குங் கண்டத்து நாதா போற்றி
ஓம் நடநவிலுந் தொழிலின் நல்லோய் போற்றி
ஓம் நணுகுதல் அரிய நிலையே போற்றி
ஓம் நதிசேர் செஞ்சடை நம்பா போற்றி
ஓம் நரகுறு துன்பம் அறுத்தனை போற்றி
ஓம் நலந்திகழும் கொன்றைச் சடையாய் போற்றி
ஓம் நல்லடியார் மனத்தூறும் நறவே போற்றி
ஓம் நல்லம் நடம்பயில் நாதா போற்றி
ஓம் நல்லவர் இதயம் ஆவாய் போற்றி 750

ஓம் நல்லவர் உள்ளம் நயப்பாய் போற்றி
ஓம் நல்லூர்ப் பெருமண நம்பா போற்றி
ஓம் நல்லூர்ப் பெருமநின் நற்பதம் போற்றி
ஓம் நல்லோய் போற்றி நன்மணி போற்றி
ஓம் நள்ளாறுடைய நாதா போற்றி
ஓம் நற்றவ நாதா போற்றி போற்றி
ஓம் நற்றவக் கொழுந்தே போற்றி போற்றி
ஓம் நற்றவனே நின்பாதம் போற்றி போற்றி
ஓம் நற்றுணை அருளும் நாயகா போற்றி
ஓம் நற்றுணையப்பா போற்றி போற்றி 760

ஓம் நறையூர் சித்தீச் சரனே போற்றி
ஓம் நன்நிலத் துப்பெருங் கோயிலாய் போற்றி
ஓம் நனவிலும் நாயேற்கு அருளினை போற்றி
ஓம் நன்றாக நடைபலவும் நவின்றாய் போற்றி
ஓம் நனிபள்ளி வளரும் நம்பா போற்றி
ஓம் நாகம் அசைத்த நம்பா போற்றி
ஓம் நாகேச்சரம்வாழ் நாதா போற்றி
ஓம் நாகைக்கா ரோணம் நயந்தாய் போற்றி
ஓம் நாடகம் நடத்தும் நாயகா போற்றி
ஓம் நாட்டகத்தே நடைபலவும் நவின்றாய் போற்றி 770

ஓம் நாட்டியத்தான்குடி நம்பீ போற்றி
ஓம் நாடிய நன்பொருள்கள் ஆனோய் போற்றி
ஓம் நாடுவார் நாடற்கு அரியாய் போற்றி
ஓம் நாமுறு குறைநீக்கும் நலமே போற்றி
ஓம் நாரையூர் நன்நகர் நலமே போற்றி
ஓம் நாலூர் மயான நாடகா போற்றி
ஓம் நாவல் ஈசுவரா போற்றி போற்றி
ஓம் நாவலூர் மேவிய நம்பா போற்றி
ஓம் நாவிற் சொல்லாய் மலர்வாய் போற்றி
ஓம் நாவின் துதிகொளும் நாயகா போற்றி 780

ஓம் நாற்றிசைக்கும் விளக்காய நாதா போற்றி
ஓம் நான்மறை ஆறங்கம் ஆனோய் போற்றி
ஓம் நான்முகற்கும் மாற்கும் அரியாய் போற்றி
ஓம் நான்முகன் போற்றி நாரணன் போற்றி
ஓம் நித்தா போற்றி நிமலா போற்றி
ஓம் நிலந்துக்க நீர்வளிதீ ஆனோய் போற்றி
ஓம் நிலைபெயர் வறியாத் தலைவா போற்றி
ஓம் நிலையாக நன்னெஞ்சில் நின்றாய் போற்றி
ஓம் நிலையாய் நின்ற தலைவா போற்றி
ஓம் நிழல்திகழ் மழுவாள் வைத்தாய் போற்றி 790

ஓம் நிழலாகி நீள்விசும்பும் ஆனோய் போற்றி
ஓம் நிறைபரஞ் சுடரே போற்றி போற்றி
ஓம் நிறையுடைய நெஞ்சின் இடையாய் போற்றி
ஓம் நின்றியூர் வளரும் நிதியே போற்றி
ஓம் நினைவார்க்குரிய துணைவா போற்றி
ஓம் நீங்காதென் உள்ளத் திருந்தாய் போற்றி
ஓம் நீங்காமே வெள்ளெலும்பு பூண்டாய் போற்றி
ஓம் நீடுர் நிருத்தநின் நீளடி போற்றி
ஓம் நீராகி நெடுவரைகள் ஆனோய் போற்றி
ஓம் நீரார் நியமம் உடையாய் போற்றி 800

ஓம் நீராவி யான நிழலே போற்றி
ஓம் நீரிடை நான்காய் நிகழ்ந்தாய் போற்றி
ஓம் நீரும் நெருப்பும் ஆனாய் போற்றி
ஓம் நீலக் குடியுறை நிருத்தா போற்றி
ஓம் நீலகண்டா போற்றி போற்றி
ஓம் நீலம் பொலிந்த மிடற்றாய் போற்றி
ஓம் நீள அகலம் உடையாய் போற்றி
ஓம் நீள்வரையின் உச்சி யிருப்பாய் போற்றி
ஓம் நீளொளி ஆகிய நிருத்தா போற்றி
ஓம் நீற்றினையும் நெற்றிமேல் இட்டாய் போற்றி 810

ஓம் நீறார் மேனி நிமலா போற்றி
ஓம் நீறேறு தோளெட்டு உடையாய் போற்றி
ஓம் நீறேறு நீல மிடற்றாய் போற்றி
ஓம் நுண்ணறி வாளர் கண்ணே போற்றி
ஓம் நுதற்கண் கனலாய் போற்றி போற்றி
ஓம் நெஞ்சக விளக்கே வள்ளால் போற்றி
ஓம் நெஞ்சத் தாமரை நிலைப்பாய் போற்றி
ஓம் நெடிய விசும்பொடு கண்ணே போற்றி
ஓம் நெடுங்களம் இனிதமர் நிமலா போற்றி
ஓம் நெய்த்தானத்து நெய் ஆடியே போற்றி 820

ஓம் நெய்யார் திரிசூலம் கையாய் போற்றி
ஓம் நெல்லிக் காஉறை நித்திய போற்றி
ஓம் நெல்வாயில் அரத்துறையாய் போற்றி
ஓம் நெல்வாயில் வளர் நிதியே போற்றி
ஓம் நெல்வெண்ணெய் மேவிய நிருத்தா போற்றி
ஓம் நெல்வேலியுறை செல்வா போற்றி
ஓம் நெற்றிமேல் ஒற்றைக்கண் உடையாய் போற்றி
ஓம் நெறிகாட்டும் நாயகா போற்றி போற்றி
ஓம் நெறியாய்க் கலந்த நினைவே போற்றி
ஓம் நெறியே போற்றி நினைவே போற்றி 830

ஓம் நேர்வார் ஒருவரையும் இல்லாய் போற்றி
ஓம் நொந்தா ஒண்சுடரே எந்தாய் போற்றி
ஓம் பகலாகி வானாகி நின்றாய் போற்றி
ஓம் பகலுங் கங்குலும் ஆனோய் போற்றி
ஓம் பகலும் இரவும் ஆனாய் போற்றி
ஓம் பகையறப் புனலும் சுமந்தாய் போற்றி
ஓம் பசுவேறிப் பலிதிரியும் பண்பா போற்றி
ஓம் பஞ்சேர் அடியாள் பங்கா போற்றி
ஓம் பட்டீச்சரமுறை பரமா போற்றி
ஓம் படர்செஞ் சடையாய் விமலா போற்றி 840

ஓம் படருஞ் சடைமேல் மதியாய் போற்றி
ஓம் படிக்காசு வைத்த பரமா போற்றி
ஓம் படிதனிற் காசிப் பதியோய் போற்றி
ஓம் படியுறப் பயின்ற பரனே போற்றி
ஓம் படைப்பாய் காப்பாய் துடைப்பாய் போற்றி
ஓம் படையாப் பல்பூதம் உடையாய் போற்றி
ஓம் பண் துளங்கப் பாடல் பயின்றாய் போற்றி
ஓம் பண்டும் இன்றும் நின்றாய் போற்றி
ஓம் பண்டே எம்மை ஆண்டாய் போற்றி
ஓம் பண்டை வினைகள் அறுப்பாய் போற்றி 850

ஓம் பண்ணார் இசையாய் நின்றாய் போற்றி
ஓம் பண்ணிசையாகி நிற்பாய் போற்றி
ஓம் பண்ணிடைத் தமிழை ஒப்பாய் போற்றி
ஓம் பண்ணியல் மாலை நண்ணுவாய் போற்றி
ஓம் பண்ணில் நிலவும் பாடலே போற்றி
ஓம் பண்ணிற் பாட்டு ஆனாய் போற்றி
ஓம் பண்ணின் இசையாகி நின்றாய் போற்றி
ஓம் பண்ணொடு வீணையாழ் பயின்றாய் போற்றி
ஓம் பண்மேல் பாவித்து இருந்தாய் போற்றி
ஓம் பணிசெய உவக்கும் பதியே போற்றி 860

ஓம் பத்தர் சித்தம் பரவினாய் போற்றி
ஓம் பத்தர்களுக்கு இன்பம் பயந்தாய் போற்றி
ஓம் பத்தா போற்றி பவனே போற்றி
ஓம் பத்தி நெறியினைப் படைத்தாய் போற்றி
ஓம் பத்திமைப் பாடல் நத்துவாய் போற்றி
ஓம் பத்தியில் விளைவாய் போற்றிபோற்றி
ஓம் பத்துப் பல்லூழிப் பரந்தாய் போற்றி
ஓம் பதிற்று ஒருநாலும் இல்லாய் போற்றி
ஓம் பந்தணை நல்லூர்ப் பசுபதீ போற்றி
ஓம் பயற்றூ ருறையும் பண்பா போற்றி 870

ஓம் பரகதி பாண்டியற்கு அருளினை போற்றி
ஓம் பரங்கிரி நாதா போற்றி போற்றி
ஓம் பரம்பரஞ் சோதிப் பரனே போற்றி
ஓம் பரமா போற்றி பாசுபதா போற்றி
ஓம் பரவுவார் பிணைகளைக் களைவாய் போற்றி
ஓம் பரவையுண் மண்தளிப் பரனே போற்றி
ஓம் பராபர முதலே போற்றி போற்றி
ஓம் பராபரா போற்றி பாசூரா போற்றி
ஓம் பராய்த்துறை மேவிய பரனே போற்றி
ஓம் பராய்த்துறை மேவிய பரனே போற்றி 880

ஓம் பரிசை யறியாமை நின்றாய் போற்றி
ஓம் பரிதி நியமப் பரனே போற்றி
ஓம் பரிந்தெனை ஆண்டாய் போற்றி போற்றி
ஓம் பரியதோர் பாம்பரைமேல் ஆர்த்தாய் போற்றி
ஓம் பரியல் வீரட்டப் பரமா போற்றி
ஓம் பல்கணக் கூத்தப் பிரானே போற்றி
ஓம் பல்பல வண்ணத் தரசே போற்றி
ஓம் பல்லடியார் பணிக்குப் பரிவாய் போற்றி
ஓம் பல்லவனீச்சரப் பரனே போற்றி
ஓம் பல்லுயிராய்ப் பார்தோறும் நின்றாய் போற்றி 890

ஓம் பல்லுயிரிக் கெல்லாம் பதியோய் போற்றி
ஓம் பல்லூழி அனைத்தும் படைத்தாய் போற்றி
ஓம் பவளத் தடவரை போல்வாய் போற்றி
ஓம் பழத்தினிற் சுவையே ஒப்பாய் போற்றி
ஓம் பழமலை நாதா போற்றி போற்றி
ஓம் பழன நகரெம் பிரானே போற்றி
ஓம் பழன நகரெம் பிரானே போற்றி
ஓம் பழிதுடைத்து ஆளும் பரனே போற்றி
ஓம் பழுவூர் மேவிய பண்பா போற்றி
ஓம் பழையாற்றுப் பட்டீச் சுரத்தாய் போற்றி 900

திருச்சிற்றம்பலம்

சிவபெருமான் போற்றிகள் 1276 - பகுதி 1 - (1-300)

விருப்பம் :)