Sunday, April 19, 2015

தந்தது உன்தன்னை கொண்டதும் என்தன்னை (பாலகுமாரனின் உடையாரில்)




தந்தது உன்தன்னை கொண்டதும் என்தன்னை
சங்கரா ஆர்கொலோ சதுரர்?
அந்தம் ஒன்றிலா ஆனந்தம் பெற்றேன்
யாதுநீ பெற்றதொன்று என்பால்?
சிந்தையே கோவில் கொண்டஎம் பெருமான்
திருப்பெருந் துறையுரை சிவனே,
எந்தையே ஈசா உடலிடம் கொண்டாய்
யான்இதற்கு இலன்ஓர் கைம்மாறே!


- நம்பியாண்டார் நம்பி.



விளக்கம் (பாலகுமாரனின் உடையாரில் (பாகம் 4)):
 
யான் என்னைக் கொடுத்தேன், பதிலுக்கு நீ உன்னைக் கொடுத்தாய், சங்கரா நம் இருவரில் எவர் கெட்டிக்காரர்? உன்னிடமிருந்து நான் அளப்பரிய ஆனந்தம் அடைந்தேன், ஆனால், என்ன கிடைத்தது உனக்கு? ஒன்று புரிந்து விட்டது. தன்னைக் கொடுப்பது என்பது எளிது. அது பெரிய மதிப்புடையதல்ல. ஆனால் மற்றவருடைய அன்பு விலை மதிக்க முடியாதது. அது கடவுளுடைய அன்பைப் போல. தான் ஒன்றுமில்லை எனத் தெரிந்து, தன்னைத் தூக்கி இறைவனிடம் கொடுத்துவிட்டு, இறைவனிடமிருந்து அவனுடைய கருணையை வாங்கிக்கொள்வது. எல்லா உயிர்களும் இறைவன் என்றால், எல்லா உயிர்களிலும் இறைவன் இருப்பானென்றால், தன்னை எல்லாரிடமும் கொடுப்பதைவிட ஆனந்தம் உலகத்தில் உண்டா? அப்படிக் கொடுத்தால் என்ன கிடைக்கும்? உன்னிடமிருந்து அந்த ஆனந்தத்தை வாங்கிக்கொண்டேன். உனக்கு என்னிடமிருந்து என்ன கிடைத்தது? மற்றவருக்கு நான் என்ன பெரிய உதவி செய்துவிட முடியும்? இறைவனுக்கு என்னால் என்ன லாபம்?

 நன்றி: பாலகுமாரனின் உடையார் நாவல்

விருப்பம் :)